சலார் வெற்றி; கேக் வெட்டி கொண்டாடிய பிரபாஸ்

 சலார் வெற்றி; கேக் வெட்டி கொண்டாடிய பிரபாஸ்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சலார்.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், தொடர்ந்து காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதுவரை சுமார் 600 கோடிக்கும் மேலாக வசூலை வாரி எடுத்திருக்கிறதுஇந்த சலார்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ், பிருத்விராஜ், பிரசாந்த் நீல் உள்ளிட்டோர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

Related post