பல கோடிகளுக்கு இந்தி உரிமை மட்டும்

 பல கோடிகளுக்கு இந்தி உரிமை மட்டும்

கல்கி படத்தின் இந்தி ஓடிடி உரிமை; சாதனை படைத்த வியாபாரம்!

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 ஏடி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசன், தீபிகா படுகோன், ரானா டகுபதி, அமிதா பச்சன்,திஷா பாட்னி எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் அமிதாப்பச்சனின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பல கோடி செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ஓடிடி உரிமையை மட்டும் சுமார் 100 கோடிக்கு பிரபல நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மொழிக்கான ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடியா என சினிமா வட்டாரங்கள் வியக்கும் அளவிற்கு வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post