உடல் எடையை குறைத்த அஜித்; பிறந்தநாள் தினத்தில் வெளியான புகைப்படம்!

 உடல் எடையை குறைத்த அஜித்; பிறந்தநாள் தினத்தில் வெளியான புகைப்படம்!

வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்குமாரை வைத்து “AK61” படத்தை இயக்கி வருகிறார் ஹச் வினோத்.

இப்படத்தில் அஜித் பல வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது. இதற்காக தனது உடல் எடையை குறைத்து வருகிறார். சுமார் 25 கிலோ வரை தனது உடல் எடையை அஜித் குறைக்கவிருக்கிறாராம்.

அதற்கான உடற்பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார் அஜித்குமார்.

இதற்காக தனது உடல் எடையில் இருந்து 25 கிலோவை அஜித் குறைவுள்ளார் என்றும், அதில் 10 கிலோ வரை குறைத்துவிட்டார் என்றும் தெரியவந்தது.

இந்நிலையில், அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் பிறந்தநாள் தினமான நேற்று வெளியாகியுள்ளது.

சொன்னதை போலவே படத்திற்காக தனது உடல் எடையை அஜித் குறைத்துள்ளார். அஜித்துடைய இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Related post