தளபதி விஜய்யை இயக்கும் ஹச் வினோத்!?

 தளபதி விஜய்யை இயக்கும் ஹச் வினோத்!?

தளபதி விஜய் தற்போது தனது 68வது படமான GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் 69வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து 70வது படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை தான் தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான DVV எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு படத்தினை இயக்கிய ஹச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Related post