பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய நடிகர் அஜித்

 பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய நடிகர் அஜித்

மகிழ் திருமேனி இயக்கத்தில் பல மாதங்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் படம் தான் விடா முயற்சி. அஜித்குமார் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித் சுமார் 105 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறாராம்.

இப்படத்தினைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படமான குட் பேட் அக்லி படத்திற்காக சுமார் 165 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

தனது முந்தைய படத்தை விட, அடுத்த படத்திற்கு பல மடங்கு சம்பளத்தை அஜித் ஏற்றியிருக்கும் இந்த செய்தியானது, கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

 

Related post