சம்பளத்தை பல மடங்கு ஏற்றிய ”லவ்வர்” மணிகண்டன்!

 சம்பளத்தை பல மடங்கு ஏற்றிய ”லவ்வர்” மணிகண்டன்!

விக்ரம் வேதா, காலா என்று சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தாலும், குட் நைட் படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் மணிகண்டன்.

குட் நைட் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியிருக்கும் லவ்வர் படமும் இளசுகள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.

லவ்வர் படத்துக்கு வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி இருக்கிறார் மணிகண்டன்.

ஆனால் அடுத்த படத்திற்கு அவர் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மணிகண்டன் நடிப்பில் வெளியாகும் படங்கள் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வரும் நிலையில், தாராளமாக அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் தரலாம் என்றும் மற்ற இளம் நடிகர்கள் 20 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் கேட்டு வரும் நிலையில், மணிகண்டன் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தால் தனது சம்பளத்தை மேலும் அதிகரிப்பார் என்றும் கூறுகிறார்கள்.

Related post