ஓட்டுக்கு காசுவாங்காதீங்கன்னு சொன்ன மாதிரி, 1000க்கு டிக்கெட் வாங்காதீங்கன்னு சொல்லுங்க விஜய் – அதிரடி அமீர்!

 ஓட்டுக்கு காசுவாங்காதீங்கன்னு சொன்ன மாதிரி, 1000க்கு டிக்கெட் வாங்காதீங்கன்னு சொல்லுங்க விஜய் – அதிரடி அமீர்!

சில தினங்களுக்குமுன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் நடிகர் விஜய்.

அப்போது பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு காசு வாங்க கூடாதுன்னு அப்பா, அம்மாகிட்ட சொல்லுங்க என்று பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு நடிகரும் இயக்குனருமான அமீர், “தலைவர்கள் யாரும் வானத்தில் இருந்து குதிக்கிறதில்லை. நம்மில் ஒருத்தர்தான் வர்றாங்க. வாக்குக்கு பணம் வாங்கக் கூடாதுன்னு பெற்றோர்கள்கிட்ட சொல்லசொல்வது போன்று, புதுப்படத்துக்கு முதல்நாள் காட்சிக்கு 1500 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதும் நேர்மையற்ற செயல்தான்.

சரிசெய்வதாக இருந்தால் எல்லாத்தையும் செய்யணும். மக்கள் ரொம்பநாளா தங்களது வாழ்வியலை திரையரங்குகளில் அமைத்திருக்கிறார்கள். அது சாபக்கேடுதான்.” என்று கூறியுள்ளார்.

 

Related post