சூரி படத்தின் பட்ஜெட் 40 கோடி!?

 சூரி படத்தின் பட்ஜெட் 40 கோடி!?

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் சூரி, கையோடு பல படங்களிலும் நடித்து வருகிறார்.

காக்கி சட்டை, கொடி, பட்டாசு உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்கு கருடன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் சுமார் 40 கோடியாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கும் வெற்றிமாறனே கதை எழுதியிருக்கிறாராம்.

சூரி நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வசூல் சாதனை நிகழ்த்தியதால், சூரியின் மார்கெட் 40 கோடியை தாண்டியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் நினைத்துக் கொண்டார் போலும்.

இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அந்த செய்திக்காக காத்திருப்போம்.

 

Related post