ராபர்ட் மாஸ்டரிடம் ஆயிஷா சொல்ல மறுத்த காதல் கதை; 18 வயதில் 2 திருமணமா?
கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கும் போது, டாஸ்க் ஒன்று நடந்தது. அதில், ராபர்ட் மாஸ்டர் “நான் 22 வயதான பெண் ஒருவரை காதலிக்கிறேன். எனக்கு வயது 41. இதை நான் ஆயிஷா மற்றும் சக ஹவுஸ்சமேட்ஸிடம் பகிர்ந்து கொண்டேன். ஆனால், ஆயிஷா மட்டும் வயதை வைத்து கேலி செய்கிறார். பெரியப்பா வயதாகும் நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கிறீகள்” போன்று என்னை விமர்சித்து வருகிறார், என்றார் ராபர்ட் மாஸ்டர்.
அதற்கு பதிலளிக்கும் விதத்தில், ராபர்ட் மாஸ்டரிடம் “என்னுடைய கதையை சொன்னால் உங்களுக்கு என்னை பற்றி ஒரு புரிதல் வரும். அதை நான் இங்கு சொல்ல இயலாது” என்றிருப்பார். அப்படி அவர் சொல்ல மறுத்த கசப்பான வாழ்க்கையை பற்றி ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ் பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், “ஆயிஷாவுக்கு 16 வயதில் ஒரு திருமணம் நடந்தது. அதன் பின் 18 வயதில் ஒரு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திற்கு இன்னும் விவாகரத்து கூட வாங்கவில்லை. ஆனால், தற்போது யோகேஷ் என்ற ஒருவரை காதலித்து வருகிறார் ஆயிஷா”.
மேலும், தனலட்சுமியிடம் “நான் ஒருவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருந்தேன். அவர் சொல்லி தான் கிளாமராக டிக் டாக் செய்துவந்ததேன்” என்றிருப்பார் ஆயிஷா.
ஆயிஷா சொன்ன நபர் நான் தான் என்று ஒப்புதல் அளித்த தேவ், “நான் அவரை கட்டுக்குள் வைக்கவில்லை. கேரளாவிலிருந்து சென்னை வந்த ஆயிஷா சென்னை அமிர்தாவில் படித்து வந்தார். அப்போது தான் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது, ஒரு நாள் நட்பு காதலாக மாற. நான் ஆயிஷாவின் வீட்டில் பேசுவதற்காக கேரளா சென்றிருந்தேன். அப்போது, ஒரு நாள் முழுவதும் என்னை ஆயிஷாவின் வீட்டார் அடித்தனர். மீண்டும் நான் சென்னை வந்தபின், என் மீதுள்ள அனுதாபத்தினால் ஆயிஷா வீட்டை விட்டு வந்துவிட்டார்.”
“என்னை நம்பி வந்த ஒருவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான். என்னுடைய சகோதரி ஒருவர் மூலம் “பொன்மகள் வந்தால்”, “மாயா” போன்ற நாடகங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தேன். அதிலிருந்து பாதியில் வெளிவந்த ஆயிஷா “சத்யா” நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் தான் டக் டாக் செய்ய ஆரம்பித்தார், ஆனால் பிக் பாஸ் வீட்டில் என்னை எதற்காக அப்படி சொன்னார் என்று தெரியவில்லை”.
சத்யா நாடகத்தில் நடித்த சில நாட்களிலேயே, அதே நாடகத்தில் நடித்த விஷ்ணுவுடன் பழக்கம் ஏற்பட்டு என்னை பிரேக் அப் செய்துவிட்டார் ஆயிஷா.
அதன் பின், “தற்போது யோகேஷ் என்பவரை காதலித்து வருகிறார். யோகேஷ் என்பவர் என்னுடைய தோழி ப்ரீத்தியின் காதலன் தான். திடீரென ஒரு நாள் ப்ரீத்தி என்னை தொடர்பு கொண்டு அழுதார். அயேஷாவும் யோகேஷும் அண்ணன் தங்கை போல் தான் பழகி வந்தனர். அதனால் தான் நானும் ஏதும் அவர்களை கண்டுகொள்ள வில்லை. இப்போது இவர்கள் இருவரும் காதலிப்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது என்று என்னிடம் வருத்தம் தெரிவித்தார்”.
மேலும் பேசிய அவர், “பிக் பாஸ் வீட்டிலும் “Y” என்ற எழுத்தில் டாலர் அணிந்திருப்பார். என்னை காதலிக்கும் போது “D” என்ற எழுத்தில் டாலர் அணிந்திருந்தார். அது அவருக்கு தாலி போன்ற ஒன்று. யாரை காதலிக்கிறாரோ அவர் பெயரின் முதல் எழுத்தில் டாலர் அணிவது வழக்கம்”. என்று பல உண்மைகளை உடைத்துள்ளார் ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ்.
இதை அறிந்த மக்கள் ஆயிஷாவை கடுமையாக விமர்சனம் செய்யது வருகின்றனர்.