IMAX தரத்தில் வெளிவரும் கேப்டன் மில்லர்

 IMAX தரத்தில் வெளிவரும் கேப்டன் மில்லர்

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமானது ஐ மேக்ஸ் தரத்திலும் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் கேப்டன் மில்லர்.

தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இப்படத்தின் ட்ரெய்லரானது யூ டியுப் தளத்தில் உள்ளது. ரசிகர்கள் பலரும் இப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.

வரும் 12 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் ஐ மேக்ஸ் தரத்திலும் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

 

Related post