யு/ஏ தரச் சான்றிதழுடன் வெளிவருகிறது “கேப்டன் மில்லர்”
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கேப்டன் மில்லர்.
படத்தின் டீசர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருப்பதால், படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பொங்கல் தின விடுமுறையாக ஜனவரி 12 அன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ தரச் சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவக்கி விட்டது படக்குழு.
விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.