கேப்டன் மில்லர் படத்திற்கு பூஜை போட்ட படக்குழு!

 கேப்டன் மில்லர் படத்திற்கு பூஜை போட்ட படக்குழு!

சாணிக் காயிதம், ராக்கி போன்றபடங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷை வைத்து கேப்டன் மில்லர் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு எதிர்பார்ப்பையும் எகிறச் செய்தது.

அடுத்த மாதம், முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி நிலையில் படத்தின் பூஜை நேற்று நடந்து முடிந்துள்ளது.

இதில் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோருடன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

மிகப் பெரிய பொருட்செலவில் தயாராக்கும் இப்படத்தின் படப்பிடிப்பைத் தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகப் பிரம்மாண்ட கிராமத்தையே தத்ரூபமாக செட் அமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post