விஜய் வருகையால் ஸ்தம்பித்த கேரளா

 விஜய் வருகையால் ஸ்தம்பித்த கேரளா

வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் நடிகர் விஜய் நடிப்பில் ‘GOAT’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஷூட்டிங்கிற்காக விஜய் நேற்று திருவனந்தபுரம் சென்றார் . அவருடைய வருகைக்காக ரசிகர்கள் மதியத்திலிருந்து விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

ஈவ்னிங் 5 மணியளவில் நடிகர் விஜய் வந்ததும் அவரது காரைச் சுற்றி ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள். அவர்களுக்கு கையசைத்து வணக்கம் சொல்லி நடிகர் விஜய் அவர்களுடைய அன்பை ஏற்றுக்கொண்டார்.

கூடியிருந்த ரசிகர்களால் திருவனந்தபுரம் விமான நிலையமே ஸ்தம்பித்து போனது.

அதுமட்டுமல்லாமல், அங்கு கூடி இருந்த கூட்டத்தால் அவருடைய கார், மிகப்பெரும் அளவில் சேதாரமாகிப் போனது.

காரின் கண்ணாடி உடைந்தும், கதவுகள் நசுங்கியும் போனது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Related post