மீண்டும் தள்ளிச் சென்ற விக்ரமின் “துருவ நட்சத்திரம்”

 மீண்டும் தள்ளிச் சென்ற விக்ரமின் “துருவ நட்சத்திரம்”

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவான திரைப்படம் “துருவ நட்சத்திரம்.

படம் உருவாகி சில வருடங்கள் ஆகியிருந்த நிலையில், படத்தினை திரைக்குக் கொண்டு வர முடியாமல் இருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

மற்ற படங்கள் மீது வாங்கப்பட்டிருந்த பணத்தை திருப்பி கொடுக்காததால், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இப்படியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று திரைக்கு படம் வெளிவரும் என்று பல நாட்களுக்கு முன்பே கூறப்பட்டு, அதற்கான ப்ரொமோஷன் பணிகளும் நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் படம் தள்ளிச் செல்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.

என்று தான் இந்த துருவ நட்சத்திரத்திற்கு வெளிச்சம் கிடைக்குமோ என்று ரசிகர்கள் பலர் ஏங்கி நிற்கின்றனர்.

 

Related post