வேட்டையாடு விளையாடு” ரீ ரிலீஸ்; வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

 வேட்டையாடு விளையாடு” ரீ ரிலீஸ்; வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க 2006ஆம் ஆண்டு வெளியான படம் தான் “வேட்டையாடு விளையாடு”.

ஹரீஷ் ஜெயராஜின் இசையில், க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இத்திரைப்படம் அப்போது வரவேற்பைப் பெற்றாலும், பெரிதான வசூலை ஈட்டவில்லை.

இந்நிலையில், இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதால், வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.

இதுவரை, சுமார் 6 கோடி ரூபாயை வசூலை குவித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த படக்குழு கேக் வெட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Spread the love

Related post