கவினுக்கு ஜோடியாக திவ்யபாரதி?

 கவினுக்கு ஜோடியாக திவ்யபாரதி?

கவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், நடன இயக்குனரான சதீஷ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார் கவின்.

படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தில், கவினுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திவ்யபாரதி தான் முதல் சாய்ஸாக இருப்பதாக தெரிகிறது. தவறும் பட்சத்தில் லவ்டுடே இவானா ஹீரோயினாக இருப்பார் என்கிறார்கள்.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என்கிறது படக்குழு.

இப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

Related post