கவினுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா?
நடிகர் கவின் தற்போது இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தவருடம் பிப்ரவரி மாதத்தில் படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், கவினின் அடுத்த படத்தை சிவபாலன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கிறார்.
இவர் இயக்குனர் நெல்சனின் உதவியாளர் ஆவார். மேலும், இப்படத்தை நெல்சனே தயாரிக்கவும் இருக்கிறார்.
படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில், கவினுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.
அனிருத் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தில் ப்ரியங்கா மோகன் கவினுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.