லியோ” பற்றி அனிருத்; வைரலாகும் புகைப்படம்!

 லியோ” பற்றி அனிருத்; வைரலாகும் புகைப்படம்!

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லியோ”. படம் வரும் வியாழன் அன்று திரைக்கு வர இருக்கிறது.

அதற்கான ஆயத்த பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்திற்கான பணிகளை முடித்து விட்டதாக அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தையும் அனிருத் வெளியிட்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் பின்னால் லியோவில் விஜய்யின் கண்கள் தெரியும்படியான புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது.

விக்ரம் படத்திலும், இதே போன்று புகைப்படத்தை பதிவிட்ட அனிருத், பின்புலத்தில் கமல்ஹாசனின் கண்கள் தெரியும்படியான புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post