குறை சொல்றதை நிறுத்துங்க… – விளாசிய தங்கர்பச்சான்!

 குறை சொல்றதை நிறுத்துங்க… – விளாசிய தங்கர்பச்சான்!

புயலால் சென்னை மாநகரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஷால் தமிழக அரசை சாடி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவிற்கு பதிலடியாக இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “ மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.

இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” என்று கூறியுள்ளார்.

Spread the love

Related post