இறுதி கட்டத்தை எட்டிய தனுஷின் “D50”!

 இறுதி கட்டத்தை எட்டிய தனுஷின் “D50”!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தனது 50வது படத்தில் நடித்து வருகிறது. தனுஷே இப்படத்தினை இயக்கவும் செய்கிறார்.

வட சென்னையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் எனவும் தெரிகிறது.

இந்த படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Related post