தளபதி 68’ல் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி!?

 தளபதி 68’ல் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி!?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இதைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி நாளை இதன் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடைபெறும் என்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த் சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கு பதிலாக நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தற்போது மகேஷ் பாபு உடன் ‘குண்டூர் காரம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post