விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த “கில்லி” டீம்!

இயக்குனர் தரணி இயக்கத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் கில்லி.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

20 வருடத்திற்கு பின்பு இப்படத்தினை மீண்டும் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இப்படத்தினை ரீ ரிலீஸ் செய்திருக்கிறார் சக்தி ஃபீலிம் பேக்டரி சக்திவேலன். படம் ரிலீஸாகி ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டு வருவதால், வசூலும் அதிகளவில் இருக்கிறது.

இதற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக கோட் படப்பிடிப்பு தளத்தில் கில்லி படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், இயக்குனர் தரணி மற்றும் விநியோகஸ்தரர் சக்திவேலன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து விஜய்க்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

Related post