பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய GP முத்து; காரணமும் பின்னணியும்;

 பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய GP முத்து; காரணமும் பின்னணியும்;

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானா நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது, பிக் பாஸின் சீசன் 6 தொடங்கி 13 நாட்களே ஆகியுள்ள நிலையில். வீட்டை விட்டு போட்டியாளர் ஒருவர் இன்று வெளியேறியுள்ளார்.

அசீம், VJ மஹாலக்ஷ்மி, இன்ஸ்டாகிராம் புகழ் தனலட்சுமி, டிக் டாக் புகழ் GP முத்து என பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில். முதல் நாள் முதலே கடும் வாக்குவாதமும் மனஸ்தாபமும் ஏற்பட்டு வந்தது.

சென்ற ஞாயிற்றுக் கிழமை கமல் ஹாசனும் “40 நாட்களில் நடக்கவேண்டிய அனைத்தும் 4 நாட்களில் நடந்துவிட்டது” என குறிப்பிட்டியிருப்பார்.

வீட்டை விட்டு வெளியேறிய GP முத்து,

கடந்த சில தினங்களாக போட்டியாளர்களின் வாழ்க்கை பற்றிய ஒரு கதை சொல்லுமாறு டாஸ்க் அளிக்கப்பட்டது. ஆனால், அதை என்னால் சொல்ல இயலாது, எனக்கு எனது பிள்ளைகளின் நினைவாக இருக்கிறது. என்னால் ஏதும் பேச முடியவில்லை என்றார் GP முத்து.

இந்நிலையில், இன்று கண்பெசன் ரூமில் GP முத்து அழுதுள்ளார். எனது பிள்ளைகளை பார்க்கவேண்டும் ஆகையால் நான் வெளியேறுகிறேன் என்று காமலிடமும் கேட்டுக்கொண்டு. கமலை கட்டி அணைத்து வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் GP முத்து.

இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் பெரும் சோகத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Related post