கேரளாவில் மாஸ் காட்டும் “ஜெயிலர்”!

 கேரளாவில் மாஸ் காட்டும் “ஜெயிலர்”!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் “ஜெயிலர்”.

படம் வெளியான அனைத்து பகுதிகளிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வசூலில் சக்கை போடு போடும் ஜெயிலர், பல இடங்களில் பல படங்களின் சாதனையை முறியடித்து வருகிறது.

தமிழ் படங்களில் விக்ரம் மட்டுமே கேரளாவில் 40.05 கோடி அளவில் வசூல் செய்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருந்த நிலையில் வெறும் 9 நாட்களில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் 40.35 கோடி ரூபாயை வசூலித்து கேரளாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது.

கேரளாவில் தமிழ் படங்களின் வசூல் நிலவரங்களின் முன்னணி நிலவரம்:

ஜெயிலர் – 40.35crs (9 Days)
விக்ரம் – 40.05crs
பொன்னியின் செல்வன் 1- 24.2crs
பிகில் – 19.7crs
ஐ – 19.65crs

 

Related post