ரீ-ரிலீஸில் சாதனை படைக்கும் விஜய்யின் “கில்லி”

இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் நடித்து 20வருடத்திற்கு முன் வெளியான திரைப்படம் தான் கில்லி.

இப்படம் தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் இது என்பது அனைவரும் அறிந்தது தான்.

20 வருடத்திற்குப் பிறகு இப்படம் தற்போது ரீ ரிலிஸாகியிருக்கிறது. சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் ரீ ரிலீஸ் செய்துள்ளார்.

2 நாளில் மட்டும் இப்படம் சுமார் 8 கோடி வரைக்கும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரீ ரிலீஸ் படங்களில் இப்படம் தான் முதல் நாள் வசூலில் அதிகம் என்பதும் கூடுதல் தகவல்.

 

Related post