தனது ஃபிட்னெஸ் ட்ரெய்னருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்!

 தனது ஃபிட்னெஸ் ட்ரெய்னருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்!
Digiqole ad

விக்ரம் கொடுத்த வெற்றியால் மிகவும் உற்சாகத்தில் இருந்து வரும் கமல், கையோடு இந்திய 2 படப்பிடிப்பிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

இப்படத்திற்காக தனது உடலையும் செதுக்கிக் கொண்டு வருகிறார். இதற்காக கமலுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னர் ஒருவர் தீவிரமான பயிற்சிக் கொடுத்து வருகிறார்.

அவர் கொடுத்த உடற்பயிற்சியில் கமலும் பக்காவாக மாறிவிட, அந்த ஜிம் ட்ரெய்னருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் கமல்.

தனக்கு உடற்பயிற்சி கொடுத்த அந்த ஜிம் மாஸ்டரை குடும்பத்துடன் வரவைத்து, அவருக்கு புதிய ரெனால்ட் காரை பரிசாக கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார் கமல். இந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் தபோது ட்ரெண்டாகி வருகின்றன.

சில மாதங்கள் முன்னர் தான் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்து அசத்தினார். அதேபோல், லோகேஷிடம் பணிபுரியும் உதவி இயக்குநர்களுக்கும் பைக் பரிசளித்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Digiqole ad
Spread the love

Related post