கமல் தயாரிப்பில் ப்ரதீப்பிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!

 கமல் தயாரிப்பில் ப்ரதீப்பிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நிறுவனம் சார்பில் அடுத்ததாக ஒரு படம் தயாரிக்கப்படவிருக்கிறது. இப்படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். ,

இதில் நாயகனாக இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். லவ் டுடே கொடுத்த ஹிட் காரணமாக இப்படத்தில் ஹீரோவாக பிரதீப்பை கமிட் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

ப்ரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் இருந்து நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூரை இறக்கவிருக்கிறார்கள் படக்குழுவினர்.

பாலிவுட்டில் நம்பர் ஒன் நாயகியாக தற்போது வலம் வரும் ஜான்வி கபூர், இக்கதைக்கு ஓகே கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post