1.7 கோடி கொடுத்து பி.எம்.டபிள்யூ காரை வாங்கிய லோகேஷ் கனகராஜ்!

 1.7 கோடி கொடுத்து பி.எம்.டபிள்யூ காரை வாங்கிய லோகேஷ் கனகராஜ்!

மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ படத்தினை இயக்கி வருகிறார்.

லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புது பி எம் டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். சுமார் 1.7 கோடி மதிப்பிலான இந்த காரானது பி எம் டபிள்யூ 7 சீரியஸ் வகையைச் சார்ந்ததாகும்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார் வாங்கிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Related post