காதலை வெளிப்படுத்த அச்சப்பட வேண்டாம் – கிருத்திகா உதயநிதி!

 காதலை வெளிப்படுத்த அச்சப்பட வேண்டாம் – கிருத்திகா உதயநிதி!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் அமைச்சராக பதவியேற்றார். பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது.

என்னுடைய செயல் அதற்கு பதில் சொல்லும் என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், நேற்றைய முன்தினம் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி, தனது தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது.

இதை வைத்து கீழ்த்தரமான புகைப்படங்களை பலர் பதிவேற்றம் செய்து பரப்பி வந்தனர்.

இந்நிலையில் இன்பநிதி தாயார் கிருத்திகா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். ‘காதல் செய்வதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் அச்சப்பட வேண்டாம். இயற்கையை புரிந்துகொள்வதற்கான ஒரு அருமையான வழி காதல்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ட்விட் பதிவு கீழ்த்தரமாக அவதூறு பரப்பிய அனைவருக்குமான சாட்டையடி பதிவு என பலர் கூறி வருகின்றனர்.

 

Related post