மாமன்னன் தந்த உதயநிதிக்கு நன்றி – முன்னாள் சபாநாயகர் தனபால்!

 மாமன்னன் தந்த உதயநிதிக்கு நன்றி – முன்னாள் சபாநாயகர் தனபால்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “மாமன்னன்”.

இப்படத்தின் கதையானது, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான தனபாலின் கதை தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அவரின் வாழ்க்கையில், நடந்தது தான் மாமன்னாக வந்து நிற்கிறது என்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசியுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், “நேத்து முதல் பலர் என்னைத் தொடர்பு கொண்டு ‘மாமன்னன்’ படம் பற்றி பேசி வாராய்ங்க. 1970களில் முதல் அதிமுகவில் இருக்கிறேன். எனது விசுவாசத்திற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மீது நம்பிக்கை வைத்து பல பொறுப்புகளை வழங்கினார்.

மாமன்னன்’ படம் என் கதையின் சாயலில் இருக்கிறது என்றால் அதை ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் நான் பார்க்கிறேன். அதற்காக படத்தை எடுத்து அதில் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. இனிமேல்தான் பார்க்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related post