200 குடும்பங்களுக்கு தலா 1000.. களம் இறங்கிய பாலா
சென்னை புறநகர் மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து இன்னமும் மீளாத நிலையில், அவர்களுக்கான தேவைகளை பல உள்ளங்கள் செய்து வருகின்றனர்.
தமிழக அரசை தாண்டி பல உள்ளங்கள் மக்களுக்கான உணவு மற்றும் குடிநீரை வழங்கி வருகிறது.
KPY மூலம் தமிழக மக்களால் அறியப்பட்ட நடிகர் பாலா, பல உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்நிலையில், புயல் பாதித்த இடத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம், சுமார் 200 குடும்பங்களுக்கு சுமார் 2 இலட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.
இந்த உதவிக்கு இணையத்தில் பலரும் பாலாவை பாராட்டி வருகின்றனர்.