புயல் பாதிப்பு; பத்து லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்!
மிக்ஜாம் புயல் பாதிப்பின் காரணமாகா சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.
வெள்ளத்தால் மக்கள் இன்னமும் மீளாத நிலை தான் உள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
பல முக்கிய பிரமுகர்கள் தங்களால் இயன்ற நிதிஉதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஹரீஷ் கல்யாண், உள்ளிட்ட பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயனும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூபாய் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.