5 மொழிகளில் மம்முட்டியின் பிரம்மயுகம்

 5 மொழிகளில் மம்முட்டியின் பிரம்மயுகம்

இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் பிரம்மயுகம். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலானது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்நிலையில், இப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கேரள மண் சார்ந்த படைப்பாக இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post