75 கோடி க்ளப்பில் இணைந்த ”கண்ணூர் ஸ்குவாட்”

 75 கோடி க்ளப்பில் இணைந்த ”கண்ணூர் ஸ்குவாட்”

இயக்குனர் ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்முட்டி நடிக்க மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் கண்ணூர் ஸ்குவாட்.

படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

படம் வெளியான நாள் முதல் அடுத்தடுத்த நாட்கள், திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது.

இதனால் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் விண்ணை முட்டியது. நேற்று வரை கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் சுமார் 75 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது.

கேரளா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து விட்டது மம்முட்டியின் கண்ணூர் ஸ்குவாட்.

 

Related post