மாமன்னன் வெற்றி: இயக்குனருக்கு மினி கூப்பர் காரை பரிசாக அளித்த உதயநிதி ஸ்டாலின்!

 மாமன்னன் வெற்றி: இயக்குனருக்கு மினி கூப்பர் காரை பரிசாக அளித்த உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”.

கடந்த வியாழன் அன்று படம் வெளியான நிலையில், நல்லதொரு விமர்சனத்தைப் பெற்றதால் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மாமன்னன் விவாதப் பொருளாகவும் மாறியதால், அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைந்து விட்டது.

இந்நிலையில், படம் வெற்றி பெற்றதால், இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மினி கூப்பர் என்ற காரை பரிசாக அளித்துள்ளார்.

இந்த நிகழ்வை தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டு, மாமன்னனை கொண்டாடிய உள்ளங்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Related post