மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

 மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

இயக்கம்: ஸ்ரீராம் ராகவன்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு

ஒளிப்பதிவு: மது நீலகண்டன்

இசை: ப்ரீத்தம்

கதைப்படி,

காதலித்த காதலியை கொன்ற குற்றத்திற்காக 7 வருட சிறைத்தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வருகிறார் விஜய் சேதுபதி. கதைக்களம் மும்பையில் நடக்கிறது.

மும்பை காற்றை சுவாசிக்க அன்று இரவு வெளியே செல்கிறார் விஜய் சேதுபதி. அன்றைய தினம் கிறிஸ்துமஸ் நிகழ்வு.

அங்கு கேத்ரினா கைஃபையும் அவரது 3 வயது மகளையும் சந்திக்கிறார். இருவருக்கும் ஒரு நட்பு ஏற்படுகிறது.

நட்பு கேத்ரினாவின் வீடு வரை செல்கிறது. பின், மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு விஜய் சேதுபதியும் கேத்ரினாவும் வெளியே ஊரை சுற்ற கிளம்புகிறார்கள்.

2 மணிநேரம் கழித்து வீட்டிற்கு வரும் இருவருக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கு, கேத்ரினாவின் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பிணமாக கிடக்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து கொடுக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்திலும் அதை அளவாகவும் தெளிவாகவும் கொடுத்திருக்கிறார். டைமிங்கில் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் மிகவும் ரசிக்க வைக்கும்படியாக இருந்தது.

7 வருடம் சிறைவாசம் அனுபவித்து வெளியே வரும் இளைஞனின் மனநிலை என்னவாக இருக்கும்.? அது எங்கெல்லாம் செல்லும் என்பதை வெளிச்சமாகவே கொண்டுவந்து தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார்.

 

நாயகி கேத்ரினா கைஃப், தனது அனுபவ நடிப்பால் உயர்ந்து நிற்கிறார். தனது கண்களால் அனைவரையும் கட்டிப் போட்டு விடுகிறார். இவரது கதாபாத்திரமே படத்தில் பெரும் ட்விஸ்டாக வந்து நிற்கிறது. முழு கதையும் இவர் மீதே பயணமாகிறது. அழகோடு நடிப்பும் பயணமாகி நம்மை அதிகமாகவே ரசிக்க வைத்து விடுகிறார் கேத்ரினா.

படத்தின், தமிழாக்கத்தில் தியாகராஜா குமாரராஜாவின் வசன வாசனை அதிகமாகவே இருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒரு சில காட்சிகள் என்றாலும் மனதில் நிற்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார் ராதிகே ஆப்தே.

ராதிகா மற்றும் சண்முகராஜா இருவரின் கதாபாத்திரம் படத்திற்கு பலமாக அமைந்திருந்தது.

மது நீலகண்டனின் ஒளிப்பதிவு மேஜிக் செய்திருக்கிறது. காட்சிகளை ரசிக்க அளவான வெளிச்சத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

ப்ரீத்தம் அவர்களின் இசையில், பின்னணி இசை நம்மை கதையோடு பயணம் செய்ய வைத்துவிட்டது.

முதல் பாதியில் சற்று மெதுவாக நகரும் கதையானது படத்தின் இடைவேளை காட்சியில் இருந்து டாப் கியர் போட்டு வேகமெடுக்கிறது.

அடுத்தடுத்த ட்விஸ்ட் காட்சிகள் ரசிக்க வைத்திருக்கிறது.

மெரி கிறிஸ்துமஸ் – கொண்டாடலாம்… –  3.25/5

Related post