முன்னேறும் மிஷன் சாப்டர் 1

 முன்னேறும் மிஷன் சாப்டர் 1

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், அபிஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி பொங்கல் வெளியீடாக வெளிவந்த திரைப்படம் தான் மிஷன் சாப்டர்1.

இப்படம் ரசிகர்களால் மட்டுமல்லாது பொது ஜனங்களாலும் பெரிதாகவும் பாராட்டப்பட்டது. இதனால், திரையரங்குகளின் காட்சி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

சிறிய திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட இப்படமானது, அடுத்தடுத்த நாட்களில் பெரிய திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டு வருகிறது.

நல்லதொரு கதையம்சம் கொண்ட படம் நிச்சயம் வெற்றி பெரும் என்பதற்கு இப்படமும் ஒரு சான்றாக இருக்கிறது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

 

Related post