தீபாவளி தினத்திற்கு திரையரங்கிற்கு வரும் தமிழ் படங்கள்… ஒரு பார்வை!

 தீபாவளி தினத்திற்கு திரையரங்கிற்கு வரும் தமிழ் படங்கள்… ஒரு பார்வை!

ஜப்பான்

இயக்கம் – ராஜு முருகன்
இசை – ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு – கார்த்தி, அனு இமானுவேல்

‘குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி’ படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ள படம் இது. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய மூன்று படங்களும் தமிழ் சினிமாவில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றாலும், பெரிதான வசூலை கொடுக்கவில்லை. ஜப்பான் அதை தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ்
இசை – சந்தோஷ் நாராயணன்
நடிப்பு – எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன்

2014ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாசி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த ‘ஜிகர்தண்டா’ படம் வெளிவந்தது. அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் போல இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

ரெய்டு

இயக்கம் – கார்த்தி
இசை – சாம் சிஎஸ்
நடிப்பு – விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, அனந்திகா

அறிமுக இயக்குனர் கார்த்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் வந்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா.

கிடா

இயக்கம் – ரா வெங்கட்
இசை – தீசன்
நடிப்பு – பூ ராமு, காளி வெங்கட்

சில சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படம். மறைந்த நடிகரான பூ ராமு, காளி வெங்கட் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு போடப்பட்ட காட்சியில் அமோக வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post