லியோ காட்சியோடு ஒளிபரப்பாகும் “ஜப்பான்” டீசர்!

 லியோ காட்சியோடு ஒளிபரப்பாகும் “ஜப்பான்” டீசர்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து உருவாகியிருக்கும் படம் தான் “ஜப்பான்”. இந்த படம் கார்த்திக்கு 25வது படமாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

வரும் 18 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் லியோ படத்தின் இடைவேளை சமயத்தில் ஜப்பான் பட டீசரை ஒளிபரப்பவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வரும் 28 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தவும் படக்குழு திட்டமிட்டு அதற்கான ஆரம்ப பணிகளையும் துவக்கியிருக்கிறது.

Related post