தங்கலான் படைக்கும் சாதனை; வியக்கும் இந்திய சினிமா!

 தங்கலான் படைக்கும் சாதனை; வியக்கும் இந்திய சினிமா!

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாளிலிந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாக இருக்கும் விக்ரம், தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் பா ரஞ்சித் இருவரின் கூட்டணி முதல் முறையாக இணைந்து இந்த ”தங்கலான்” படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. இப்படம், தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது உலக சினிமாவிற்கானது என்றும் பலர் கூறி வருகின்றனர்.

இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் விக்ரமின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தற்போது படத்தின் முன்னோட்டம் யூ-தளத்தில் மட்டும் சுமார் 90 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கொடுத்துள்ளது.

 

Related post