சூர்யாவுடன் ஜோடியாகிறார் ”சீதா ராமம்” நாயகி

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது “சூர்யா 42”. வரலாற்று பின்னணி கொண்ட இப்படம் மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.
பல வேடங்களில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
இந்நிலையில், சீதா ராமம் படத்தில் நாயகியாக நடித்திருந்த மிருணாள் தாகூர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீதா ராமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பலரின் மனதை கவர்ந்த மிருணாள் தாகூர், இப்படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.