16 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைக்கும் “கங்குவா” டீசர்

 16 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைக்கும் “கங்குவா” டீசர்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் கங்குவா. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று முன் தினம் மாலை நேரத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்லதொரு வரவேற்பைப் பெற்ற இந்த டீசர், இதுவரை சுமார் 16 மில்லியன் பார்வைகளை யூ-டியூப் தளத்தில் மட்டுமே பெற்றுள்ளது.

வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மிரட்டலான பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நின்றுள்ளது.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

Related post