ரி ரிலீஸாகும் கமல்ஹாசனின் “நாயகன்”!

 ரி ரிலீஸாகும் கமல்ஹாசனின் “நாயகன்”!

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் “நாயகன்”.

தமிழ் சினிமாவை புரட்டி போட்ட படமாக பார்க்கப்பட்டது இந்த நாயகன் திரைப்படத்தை.

சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இளையராஜாவின் இசை இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

tஹற்போது இந்தப் படத்தின் டிஜிட்டல் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நாயகன் படத்தை ரி ரிலீஸ் செய்யவிருக்கிறது படக்குழு.

 

Related post