பெண் குழந்தைக்கு தந்தையானார் புகழ்; வைரல் பதிவு!

 பெண் குழந்தைக்கு தந்தையானார் புகழ்; வைரல் பதிவு!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் புகழ்.

இதன்மூலம், இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர்.. அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளையும் பெற்றார்.

ஹீரோவாகவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது,இந்நிலையில் அவர் மனைவி பென்சி கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது இவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை புகழ், புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்… மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். என்மகளே …தாயும் சேயும் நலம் என பதிவிட்டுள்ளார் புகழ்.

இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

Spread the love

Related post