மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த்!?

 மீண்டும் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த்!?

ஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருந்தார்.

படம் கலவையான விமர்சனம் பெற்றிருந்த நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கியிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்திலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றவிருக்கிறாராம்.

இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவிருக்கிறார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கவிருக்கிறார்.

விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post