படத்தைப் பார்த்து ஏ ஆர் ரகுமானை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!

 படத்தைப் பார்த்து ஏ ஆர் ரகுமானை பாராட்டிய சூப்பர்ஸ்டார்!

ஏ. ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா ஒன்லைனாக சொன்ன ஒரு ஐடியாவை வைத்து, அதை கதையாக எழுதி இயக்கியுள்ளார் இசைப்புயல். அந்த படம் தான் “லேமஸ்க்”.

ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அதன்படி அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி அடையாளம் காண்கிறாள் என்பது லேமஸ்க் படத்தின் கதை.

இதில், நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், லே மஸ்க் திரைப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு காண்பித்துள்ளார் ஏ ஆர் ரகுமான். லே மஸ்க் படத்தை கண்டு ரசிச்சிருக்கார்.

விர்சுவல் ரியாலிட்டி கிளாஸ் அணிந்து சேரில் ஸ்டைலாகவும், கெத்தாகவும் அமர்ந்தபடி ரஜினி அந்த படத்தை பார்த்த போது எடுத்த புகைப்படத்தை ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

படத்தைப் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ ஆர் ரகுமானை வெகுவாக பாராட்டினாராம்.

 

Spread the love

Related post