திருவண்ணாமலையில் ரஜினி!

 திருவண்ணாமலையில் ரஜினி!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது “லால் சலாம்” எனும் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ரஜினிகாந்த் அங்கு வந்திருந்தார்.

அவர், வந்ததை கண்ட பொதுமக்கள் அங்கு அவரை சுற்றி தலைவா தலைவா என கோஷமிட்டனர்.

தொடர்ந்து சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த், பொதுமக்களிடம் கைகொடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

Related post