வட சென்னை” ரீ ரிலீஸ்; கமலா திரையரங்கில் 9000 டிக்கெட் விற்பனை!

 வட சென்னை” ரீ ரிலீஸ்; கமலா திரையரங்கில் 9000 டிக்கெட் விற்பனை!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “வட சென்னை”.

இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தினை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

அதற்கு, சென்னை கமலா திரையரங்கில் இப்படம் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. டிக்கெட்டின் விலை சுமார் 48 ரூபாய் மட்டுமே என்று தள்ளுபடி விலையை அறிவித்தது கமலா திரையரங்கம்.

இதனால், உற்சாகமடைந்த தனுஷ் ரசிகர்கள் டிக்கெட்டை புக் செய்தனர். இதுவரை, அந்த திரையரங்கில் வட சென்னை படத்திற்கு மட்டும் சுமார் 9000 டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

3 ஷோ மட்டுமே ப்ளான் செய்யப்பட்ட நிலையில், இப்போது 30 ஷோ வரை போடப்பட இருப்பதாகவும் திரையரங்கம் தெரிவித்துள்ளது.

Related post