நானே வருவேன் ரன்னிங்க் டைம் இவ்ளோ தாங்க… மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தான் “நானே வருவேன்”.
கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது நானே வருவேன். இந்நிலையில், படத்தின் ரன்னிங்க் டைம் வெளியாகியுள்ளது. 2 மணி நேரம் 2 நிமிடங்களே இப்படத்தின் ரன்னிங்க் டைம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமும் கிட்டத்தட்ட இதே ரன்னிங்க் டைம் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் நீளம் படத்தின் ஈர்ப்பை குறைக்கக் கூட வாய்ப்பிருப்பதால், தனுஷ் தற்போது இதில் சற்று கவனமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.