ராஜ ராஜ சோழன், பிரபாகரன் படங்களை நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார் – சீமான்!!

 ராஜ ராஜ சோழன், பிரபாகரன் படங்களை நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார் – சீமான்!!
Digiqole ad

ராஜராஜ சோழன் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உண்மையான வரலாற்றை நான் தயாரிப்பேன் என்றும் அந்த படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ராஜராஜசோழனை இந்து அரசனாக்க முயற்சி செய்கிறார்கள் என வெற்றிமாறன் சில தினங்களுக்கு முன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ராஜராஜசோழன் மற்றும் பிரபாகரன் திரைப்படங்களை நான் தயாரிப்பேன் என்றும் அந்த படங்களை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Digiqole ad
Spread the love

Related post